Breaking

Wednesday, January 9, 2019

இணைய வியாபாரமொன்றை ஆரம்பிப்பது எப்படி?

January 09, 2019 0
இணைய வியாபாரமொன்றை ஆரம்பிப்பது எப்படி?

ஆன்லைனில் வியாபாரமொன்றை ஆரம்பிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஆரம்பத்திலேயே வாழ்த்துக்கள் கூறுவது ஏனெனில் ஆன்லைன் வியாபாரமொன்றை ஆரம்பிப்பது எப்படி என தெரிந்துகொள்ளும் உங்கள் ஆர்வம் எனக்கு பிடித்திருக்கிறது.

ஆன்லைனில் வியாபாரமொன்றை ஆரம்பிக்க உங்களுக்கு எண்ணம் இருந்தால் அதை இப்பொழுதே விட்டிவிடுங்கள். மண்ணிக்க வேண்டும் ஏன் அவ்வாறு கூறினேன் என்றால் ஆன்லைனில் ஒரு பொழுதும் வியாபாரங்கள் வெற்றியளிப்பதில்லை, ஒவ்வொருவரினதும் Brand தான் வெற்றியளிக்கிறது. ஆகவே வியாபாரமொன்றை ஆரம்பிப்பது எப்படி என பயில்வதை விட உங்களுக்கான Brand  ஐ உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள். காலப்போக்கில் அதுவே பாரிய வியாபாரமாக மாறிவிடும். 

முதலீடின்றி வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும் என்றால் நிச்சயம் உங்களுக்கு அது ஆன்லைனில் முடியாது. சில வேலைகளை செய்துகொள்ள நாம் பணம் செலவு செய்துதான் ஆகவேண்டும். 

சரி, ஆன்லைனில் வியாபாரம் செய்ய வேண்டுமென முடிவு செய்துவிட்டோம், ஆனால் எப்படி? எங்கிருந்து ஆரம்பிப்பது என யோசிக்கின்றீர்களா?

முதலில் நீங்கள் உங்களுக்கான சந்தை ஆய்வை மேற்கொள்ள வேண்டும். சந்தை ஆய்வா? எப்படி செய்ய வேண்டும்? & எதற்காக செய்ய ​வேண்டும் என்றால்?

2017 ஆண்டு டிசெம்பர் ஆகும் பொழுது அமெரிக்காவில் உள்ள 50% சில்லறை கடைகள் மூடப்பட்டுவிட்டதென நான் ஒரு பதிவில் கற்றேன். (தரவு தவாறாக உள்ளதெனில் கருத்துப்பபெட்டியில் தெரிவிக்கவும்.) அதனால் இவ்வுலகம் E-Commerce உலகிற்கு படிப்படியாக மாறிவருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. நிலை அவ்வாறு இருக்கையில், நம் நாடுகளுக்கும் அதுவெ நிகழப்போகிறது எண்ண எண்ணமும் வந்துவிட்டது. அதனால்தான் ஆன்லைனில் உங்கள் வியாபாரங்களை ஆரம்பியுங்கள் என்கின்றேன்.

செக்கனுக்கு செக்கன் ஆன்லைனில் வியாபாரங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. அதனால் போட்டியும் அதிகம். அப்போட்டி தன்மையின் மத்தியில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமாயின்

  • என்ன பொருட்களை மக்கள் பணம் கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றார்கள்?
  • எந்த நாட்டில் அப்பொருளுக்கு கேள்வி இருக்கின்றது? எவ்வளவு பேர் இருக்கின்றார்கள்? எவ்வளவு பேர் இப்பொருள் பற்றி இணையம் வாயிலாக தேடுகின்றார்கள்?
என தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் எங்கள் வியாபாரம் வெற்றியடையும். பொதுவாக நாம் ஆன்லைனில் இல்லாமல் நம் பிரதேசங்களில் ஆரம்பிக்கும் வியாபாரத்தை விட ஆன்லைனில் ஆரம்பிக்கும் வியாபாரங்கள் வெற்றியளிக்க இவ்வாறான வாய்ப்புகள் இருப்பதே காரணமாக கருதப்படுகின்றது.


சரி, எவ்வாறு அதனை செய்வது என கேட்டீர்கள் எனின், அதற்கு உங்களுக்கு Google Trends உதவுகின்றது. இச்சேவை மூலம், நீங்கள் ஏதாவது ஒரு தலைப்பை தேடினீர்கள் என்றால், அத்தலைப்பு சம்பந்தமாக Google ல் வழங்கப்படும் தரவுகள் உங்கள் தலைப்பு சம்பந்தமாக யாதேனும் முடிவொன்றிற்கு வர உதவியாய் இருக்கும்.


படம் தௌிவாக தெரியவில்லையெனில், படத்தின் மேல் கிலிக் செய்தால் பெரிதாக காணலாம்
01 என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் எந்த நாட்டில் நிலவரத்தை பார்க்க இருக்கிறோம் என்று நாடை தெரிவு செய்ய வேண்டும். (நான் இந்தியா என்று வழங்கியுள்ளேன்.)

02. எவ்வளவு காலத்திற்குள் கூகிலால் உள்வாங்கப்பட்டுள்ள தரவுகள் வேண்டும் என இவ்விடத்தில் தெரிவு செய்யலாம். (நான் கடைசி 12 மாதங்கள் என தெரிவு செய்துள்ளேன்.)

03. எந்த Category ல் தேடல் செய்யப்பட்டவைகள் மட்டும் வேண்டும் என தெரிவு செய்யலாம்.

04. Web Search செய்தவைகள்/ YouTube Search செய்தவைகள் / Shopping செய்தவை என இவ்விடத்தில் Filter செய்துகொள்ளலாம்

05. நாம் தேடிய  தலைப்புகளுக்கு இருக்கும் Demand ஐ ஒரு வரைபு மூலம் காட்டப்பட்டிருக்கின்றது. அத்துடன் அவை தௌிவாக தனி தனி நிறங்களில் உள்ளது உங்களுக்கு மிகவும் இலகுவாக்கும்.

06. நாம் தேடிய பகுதியில் (இந்தியாவில்) எந்த வகைக்கு எந்த பிரதேசங்களில்   Demand உள்ளது என நிறங்களால் அழகாக காட்டப்பட்டுள்ளது

07. நாம் தேடிய பிரதேசத்தில் இன்னும் தௌிவாக எந்த நகரத்தில் எவ்வளவு Demand என்பதை அழகாக காட்டுகின்றது.

ஒரே நேரத்தில் எத்தனை தலைப்புகை வேண்டுமென்றாலும் தேடலாம். அவ்வாறு தேடும் பொழுது அத்தலைப்புகளுக்கு இடையில் இருக்கும் வித்தியாசத்தையும் நீங்கள் பார்வையிடலாம். எவ்வாறான வியாபாரமொன்றை செய்யப்போகின்றீர்கள் என்ற குழப்பத்தில் இருப்பீர்களாயின் இதன் மூலம் சிறந்த முடிவொன்றிற்கு வரலாம்.

அதெற்கெல்லாம் முன்பு உங்களுக்கு உங்கள் Niche என்னவென்று சரியாக தெரிவு செய்திருத்தல் வேண்டும்.


Niche என்றால் என்ன? Niche ஐ சரியாக தெரிவு செய்வது எப்படி? 


Niche என்பது நீங்கள் என்ன விற்கப்போகின்றீர்கள் என்பதாகும். அதிலும் Main Niche மற்றும் Sub Niche என்று உள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் கோல்ப் விளையாட்டு பொருட்களை விற்க எண்ணியுள்ளீர்கள் எணின், Gold Equipment என்பது உங்கள்  Sub Niche  ஆக அமையும். Main Niche ஆக அமைவது Sports என்பதாகும். இவ்வாறு நீங்கள் உங்களுக்கான Niche ஐ தெரிவு செய்துகொள்ள வேண்டும்.

அதற்கு நீங்கள் ஆன்லைனில் விற்பனையாகும் பொருட்கள் சேவைகள் பற்றி சற்று தெரிந்துகொள்ளவும் வேண்டும். நாம் பேசுவது E-Commerce பற்றியாகும், அதனால் உலகிலேயே அதிகம் பொருட்கள் சேவைகள் விற்பனையாகும் முன்னனி E-Commerce தளமான அமேசன் தளத்திற்கு சென்றால், அங்கு Departments என்று ஒரு பகுதி இருக்கும்



அதில் காணப்படும் வகைகள்தான், உலகில் அதிகமாக மனிதர்களால் இணையம் மூலம் வாங்கப்படும் பொருட்களின் வகைகள். சரி, அடுத்த விடயம் என்னவென்றால், இது அமெரிக்காவில் பிரபல்யமான ஒரு தளம். இது அமெரிக்காவில் கொடிகட்டி பறந்தாலும் இதில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் சீனாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அமேசன் தளத்தில் மிக அதிகமான  விலையில் காணப்படும் பொருட்கள் கூட பெரும்பாலும் சீனாவில் இருந்து வாங்கப்பட்ட பொருட்களாகவும் அமையும். (இங்கு பெரும்பாலும் என கூறியது, எல்லா சந்தப்பங்களிலும் பொருந்தாது.) 

எது எவ்வாறாயினும் அமேசானில் உள்ள பொருட்கள் பெரும்பாலும் Aliexpress ல் இருப்பதை நீங்கள் நிச்சயம் ஒருநாள் கண்டிருப்பீர்கள். அதனால் அமேசானில் உள்ள Departments களில் உங்களுக்கு பொருத்தமான Department ஐ தெரிவு செய்துகொள்ளுங்கள். உங்களுக்கான Niche ஐ தெரிவு செய்யும்பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் என்னவெனில், 

உங்கள் Niche உங்களுக்கு பிடித்த விடயங்களை  மையப்பட்டுத்தி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள்  கடைசிவரை இந்த வியாபாரத்தை ஆர்வத்துடன் சலிக்காமல் செய்துவருவீர்கள். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், எனக்கு உண்மையில் கணினிகள் மற்றும் தொழில்நுட்பம் மீது விருப்பம், அதுதான் என் Passion என்றால் அது சம்பந்தமான பொருட்களை விற்பதிலும் அது சம்பந்தமான ஆக்கங்களை உருவாக்குவதிலும் ஈடுபடும் பொழுது, நான் மிகவும் சந்தோஷமாக  இருப்பேன். என்  Passion  இது என்பதால்தான் உங்களுக்கு இப்பதிவைகூட நான் ஆசையுடன் எழுதுகிறேன். இதை விட்டுவிட்டு நான் மற்றவர்கள் செய்கிறார்களே என்று வேறு எதையாவது தேர்ந்தெடுத்தால், குறிப்பிட்ட காலம் வரையில்தான் அதை செய்ய முடியும். கஷ்டப்பட்டு செய்துகொண்டு போனாலும் இப்பபொழுது Passion ஐ விட்டுவிட்டு நாம் அனைவரும் வேறு ஏதே கம்பனியில் வேலை செய்கிறபொழுது ஏற்படும் வெறுப்பு மனநிலை ஒருநாள் வந்தே தீரும். ஆகவே உங்கள்  Niche உங்கள் Passion ஆக இருப்பதுதான் சிறந்தது. அத்துடன் வியாபாரம் செய்யும் பொழுது, பொருட்கள் / சேவைகள் சம்பந்தமாக வாடிக்கையாளர்கள் நம்மிடம் பல கோணங்களில் கேள்விகள் கேட்கக்கூடும். அவ்வாறு இருக்கையில் நாம் Passion ஆக இருக்கும் ஒன்றை Niche ஆக தெரிவு செய்தோம் எனில் நிச்சயம் பயமின்றி பதிலளிக்கலாம்.

சரி, Niche ஐ தெரிவு செய்துவிட்டோம் என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? நான் ஏற்கனவே கூறியது போல் அந்த Niche ற்கு என்ன Demand இருக்கின்றது என அறிய Google Trend ல் தேடிப்பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் Niche  ஆக Sports அமையும் எனில் அதன் Sub - Niche  களை தேட வேண்டும். (உதாரணம் Cricket, Football, Tennis etc ) 

அவ்வாறு தேடுகையில்  Demand  அதிகமாக இருக்கும் முதல் 05 Sub - Niche  களையும் ஒருபுறம் வைத்துக்கொள்ளுங்கள். 

முடிவெடுக்கும் பொழுது நன்கு யோசித்து எடுங்கள், காரணம் இடையில் மாற்ற முடியாது, அவ்வாறு மாற்றினால் நம் வெற்றி பயணம் கண்டிப்பாக தடைப்படும்

அடுத்த பிரச்சினை என்னவெனில், எந்த நாட்டில் எவ்வளவு Demand என்று தெரிந்துவிட்டது, ஆனால் என்ன Keywords பாவித்து கூகிலில் தேடுகின்றார்கள் என்று தெரியாது.

Keyword Research ஒன்றை செய்வது எப்படி?


நம் Niche சம்பந்தமாக தேடல் பொறிகளில் என்னென்ன Keywords பாவித்து தேடுகின்றார்கள் என்றும் எந்தெந்த  Keywords களுக்கு போட்டித்தன்மை அதிகமாக இருக்கின்றது என்று ஆராயும் செயற்பாடுதான் Keyword Research ஆகும். இதனை செய்வதற்கு மிக துள்ளியமான மென்பொருட்கள் (இணையம் வாயிலாக  இயங்கும் மென்பொருட்கள்) அதிகளவில் காணப்படுகின்றது. அவற்றிற்று பணம் செலுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ளலாம், ஆனால் பயப்பட தேவையில்லை. ஆன்லைனில் வியாபாரமொன்றை ஆரம்பிக்கும் எங்களுக்கு மிகவும் நேர்த்தியான மென்பொருள் ஒன்று கூகில் மூலம் வழங்கப்படுகின்றது. அதுவும் இலவசமாக. ஆரம்பத்தில் இலவச மென்பொருட்களை பாவித்தாலும் உங்கள் வியாபாரம் வளர்ச்சியடையும் பொழுது இதைவிட நல்ல நல்ல மென்பொருட்களுக்கு மாறலாம்.

கூகிலில் இலவசமாக வழங்கப்படும் இந்த மென்பொருளின் பெயர் Google Keyword Planner ஆகும். ஆனால் இது நமக்காக வழங்கப்படும் மென்பொருள் அல்ல, கூகிலில் விளம்பரங்கள் இடுபவர்களுக்கு உதவியாய் வழங்கப்படும் மென்பொருள்தான் இது. இருப்பினும் நம் தேவைக்கு நாம் அதை இவ்விடத்தில் பயன்படுத்திக்கொள்கின்றோம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இதனை பாவிக்க.. கூகிலில் Keyword Planner என்று தேடினால் வரும் Link மூலம் திறந்தால் உங்கள் இணையத்தளம் மற்றும் Credit Card Details கேட்கும். அதனால் இந்த  Link ஐ பாவித்து உள்நுழைய மறக்காதீர்கள். அடிக்கடி இது உபயோகமாகும் என்பதால் Bookmark செய்துகொள்ளுங்கள்.


உள்ளே சென்றதும் மேல்காணப்படும் படத்தில் போன்று காட்சியளிக்கும். அதில் உங்கள் ஈ-மெயில் முகவரியை பதிந்து Save and Continue பொத்தானை அழுத்துங்கள்.




அதன் பின்னர் மேல் உள்ள படத்தில் உள்ள இலக்கங்கள் வரிசைப்படி Tools > Keyword Planner என்பதை தெரிவு செய்யுங்கள்


பிறகு வரும் விண்டோவில் Find New Keywords என்பதை தெரிவு செய்தால் கீழ்வருமாறு ஒரு விண்டோ தோன்றும்


அதில் நீங்கள் தேடவிரும்பும் Keywords ஐ உட்செலுத்தி Get Started என்ற பொத்தானை அழுத்தவும். அதன் பின்னர் அந்த Keywords பற்றிய தரவுகள் கீழே காட்டப்பட்டுள்ளவாறு வழங்கப்படும்.
Keywords தேடும் பொழுது  நீங்கள் ஒரு கூகில் பயனராக இருக்கும் பொழுது எப்படி தேடுவீர்கள்? என்ன வார்தைகளை உபயோகிப்பீர்கள் என சிந்தித்து உட்செலுத்துங்கள். 


  1. எந்த நாடுகளை மையப்படுத்தி தேடுகின்றீர்களோ அவற்றை இவ்விடத்தில் குறிப்பிடலாம் (நான் இந்தியா மற்றும் இலங்கை என்று வழங்கியுள்ளேன்)
  2. எந்த மொழியில் தேடுபவர்களை பார்க்க வேண்டுமோ அதை இவ்விடத்தில் தெரிவு செய்யலாம்
  3. நீங்கள் தேடுவது கூகிலில் மட்டுமா, அல்லது பிற தேடல் தளங்களிலும் தேடுபவர்களின் தரவுகள் வேண்டுமா என குறிப்பிடலாம்
இங்கு இலக்கம் 04 ஐ கவனியுங்கள். (படம் தௌிவாக தெரியவில்லையெனில் படத்தின் மீது கிலிக் செய்யவும் அப்பொழுது பெரிதாக தெரியும்) அதில் நீங்கள் தேடிய Keywords களுக்கான முடிவுகளை காட்டும். அதில் சராசரியாக ஒரு மாதத்திற்குள் தேடல்களின் எண்ணிக்கை மற்றும் அந்த Keyword ற்கான போட்டித்தன்மை என்பன வலதுபுறமாக முறையே காட்டப்பட்டுள்ளது. அதை நான் பச்சை நிறத்தில் குறிப்பிட்டு காட்டியுள்ளேன்.

இலக்கம் 05 ல் நான் மஞ்சள் நிறத்தில் காட்டியுள்ளது நீங்கள் தேடாத, ஆனால் உங்கள் Keywords களுக்கு அமைவாக கூகிலில் பரிந்துரை செய்யும் Keywords Ideas காட்டப்பட்டுள்ளது. 

இவற்றின் அடிப்படையில் நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம். எந்த Keyword ற்கு Average Monthly Searches அதிகமாகவும் Competition (போட்டித்தன்மை) Low ஆகவும் இருக்கிறதோ, அந்த Keyword களுக்கு வியாபாரம் செய்ய இலகுவாக முடியும். மாறாக   Competition (போட்டித்தன்மை) Medium ஆக காண்பித்தால் Keyword ற்கு சற்று கஷ்டமானதாக அமையும், அதே இடத்தில் High ஆக காண்பிப்பவைகளுக்கு வியாபாரம் ஆரம்பிக்க கூடாதென்று நான் கூறவில்லை அதுவும் கஷ்டமாக அமையும் என்றுதான் கூறுகின்றேன். High ஆக  காண்பிக்கும் Keyword இலும் வியாபாரம் செய்து வெற்றிகண்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது.

இப்பதிவில் நாங்கள் எப்படி சரியாக Niche ஒன்றை தெரிவு செய்வது மற்றும் எப்படி அந்த Niche ற்கான கேள்வியை ஆய்வு செய்வது என்பதை தௌிவாக பார்த்தோம். அடுத்த பதிவில் எப்படி அடுத்த கட்டமான நம் Niche ற்கான பொருட்களை தெரிவு செய்வது என்பதை பற்றி பார்ப்போம். 


Sunday, January 6, 2019

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது?

January 06, 2019 0
இணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது?

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள், உண்மையில் இணையம் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் கையாளும் பிரதான வழிகளில் 100% பயன்தரக்கூடிய வழிகளைப்பற்றியும், அவற்றை எவ்வாறு செய்வது என சிறிது விளக்கங்களுடன் இப்பதிவில் உங்களை சந்திக்க நான் வந்துள்ளேன். நான் உங்கள் ஹிந்துஜன். 

அன்லைனில் பணம் சம்பாதிக்க எண்ணம் வந்தவுடனயே நம்மவர்கள் என்ன செய்வீர்கள் என்றால் கூகிலில் சென்று தேடுவீர்கள். 


இவ்வாறு தேடும் பொழுது உங்களுக்கு கிடைக்கும் Search Result ல் பல்வேறு முறைகள் உங்களுக்கு காண்பிக்கப்படும். காண்பிக்கப்பட்ட முறைகளை நம்மவர்கள் தமிழில் இடப்பட்டுள்ள பதிவுகளை வாசித்து தைப்போல் நீங்களும் செய்துபார்த்திருப்பீர்கள் என்பது என் நம்பிக்கை. அப்படி செய்திருப்பீர்களாயின் நிச்சயமாய் உங்கள் மனதில் ஆன்லைனில் சம்பாதிக்க முடியாது என்ற முடிவில்தான் இப்பொழுது இருப்பீர்கள். மற்றும் இப்பதிவில் மட்டும் என்ன புதிதாய் இருந்துவிடப்போகின்றது என்ற எண்ணத்துடன்தான் இப்பதிவையும் வாசிக்க வந்திருப்பீர்கள். காரணம் கூகிலில் நீங்கள் தேடினால் (தமிழில்) யூட்டியுபிலும் கூட நம்மவர்கள் பெரும்பாலாக பொய்யான பதிவுகளையே இட்டுருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது. அவ்வாறு இடப்பட்ட பதிவுகள் அனைத்தும் பொய்யானவை என்று நான் கூறவில்லை. ஆனால் நிச்சயம் பெரியதொரு மாற்றத்தை அவவை உங்களில் ஏற்படுத்தியிருக்காது. உண்மை நிலை அவ்வாறாயின் 

ஆன்லைனில் பணம் சம்பாதிக்கக்கூடிய 100% பயன் தரக்கூடிய வழிகள் என்ன? 
என்று என்னிடம் நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அதற்கு முன்பதாக ஏன் இவ்வாறு நடக்கின்றது. என்று புரிந்துகொண்டால் நிச்சயம் இனிமேல் சரியான வழிகளை இனம்காண உங்களுக்கு இலகுவாக இருக்கும்.



Ads Clicking மற்றும் PTC Sites.


மேற்கூறியவாறு நீங்கள் தேடும் பொழுது முதலில் உங்களுக்கு புலப்படும் விடயங்களில் முக்கிமான ஒன்றுதான் Ads Clicking மற்றும் PTC Sites. இம்முறைகளை பயன்படுத்தலாமா? என்று கேட்டால், இம்முறைகள் இருக்கும் பக்கம் தலைவைத்துகூட படுக்க வேண்டாம் என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் கனவில் கூட இம்முறைகளில் பணம் சம்பாதிக்க உங்களால் முடியாது. காரணம்  Ads Clicking தளமொன்றில் அர்த்தமற்ற வாசகர்களுக்காக எந்த நிறுவனமும் (அவர்கள் கூறுவது போல்) பணம் வழங்க தயாராக இல்லை.

சற்று சிந்தியுங்கள், உதாரணத்திற்கு நீங்கள் ஒரு PDF Software வைத்திருக்கின்றீர்கள். உங்கள் தளத்திற்கு பயனர்களை வரழைக்க நீங்கள் உங்கள் விளம்பரங்களை Ads Clicking / PTC தளமொன்றிற்கு வழங்குகின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். பிறகு நான் அந்த Ads Clicking / PTC தளத்தில் புதிய கணக்கொன்றை ஆரம்பிக்கின்றேன். பிறகு உங்கள் PDF Software  இருக்கும் தளத்திற்கு Ads Clicking / PTC முறைகள் மூலம் வருகைத்தருகின்றேன். 05 செக்கன்கள் காத்திருக்கின்றேன். பிறகு அப்பக்கத்தினை துண்டித்துவிடுகின்றேன். 

இப்பொழுது மேற்கூறிய சம்பவத்தினை வைத்து பார்த்தால், உங்கள் PDF Software தளத்திற்கு வரும் நான் PDF Software வை விலை கொடுத்து வாங்கும் நோக்கத்துடன் வரவில்லை. மாறாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வந்துள்ளேன். ஆகவே எனது வருகை உங்களுக்கு பயனளிக்காது. பயனளிக்காத என் வருகைக்காக நீங்கள் பணம் வழங்குவீர்களா??? அப்படி வழங்கினாலும் அதில் உங்களுக்கு என்ன கிடைத்துவிடும். ஏமாற்றத்தை தவிர.??

அதெல்லாம் சரி, ஆனால் Ads Clicking / PTC தளங்களில் பணம் சம்பாதித்துள்ள நபர்களை நான் இணையத்தின் பதிவுகளின் மூலம் பார்த்திருக்கின்றேனே! 

 இப்படி தோன்றுகிறதா? கீழே பாருங்கள்...


இது அவ்வாறானதொரு பதிவு, பதிவை வாசிக்கும் அனைவருக்கும் நிச்சயம் ஒரு நம்பிக்கை வந்துவிடும். அப்படி எழுதப்பட்டிருக்கின்றது, ஆனால் பதிவின் படி, Ads Clicking மற்றும் PTC தளங்களில் கணக்குகளை ஆரம்பிக்க நமது Mouse Pointer ஐ காட்டப்பட்டிருக்கும் படத்தின் மேல் கொண்டுசென்றால் கீழ்வருமாறு காட்டும். 


அப்படி காட்டப்படும் லிங்க்கிற்கு தான் நீங்கள் கணக்கினை திறக்க செல்வீர்கள். உண்மையை சொன்னால்,  அந்த லிங்கினை கிலிக் செய்து நீங்கள் அந்த தளத்தில் கணக்குகளை திறந்தால் இப்பதிவை எழுதியவருக்கு பணம் கிடைக்கும். அது 5-25$ வரை கிடைக்கலாம். அப்படி கிடைத்தவர்களையும் இதுவரை நான் பார்த்ததில்லை. நீங்கள் பார்த்திருப்பின் கீழே கெமென்ட் பாக்சில் பதிவிடவும்.

இவ்வாறான தவறான வழிகாட்டல்களினால்தான், புதிதாக இணையத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் முயற்சிகளை செய்பவர்கள் இறுதியில் தோல்வியடைகின்றார்கள். நானும் அப்படித்தான் என் பயணத்தை ஆரம்பித்தேன்.

Ads Clicking மற்றும் PTC தளங்கள் வெற்றியளிக்காவிடின் எந்த முறைகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம்??

என்னுடைய அனுபவம் மற்றும் நான் கற்ற விடயங்கள் அடிப்படையில்


  • Content Marketing 
  • Freelancing
  • Affiliate Marketing
  • Dropshipping
  • Membership Websites
  • E-Mail Business
  • Online Store
 போன்ற வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும். சரி, இப்பபொழுது இதில் ஒவ்வொன்றாய் தனித்தனியே பார்க்கலாம்.

Thursday, December 13, 2018

Fiverr Profile ஐ வடிவமைப்பது எப்படி? | Fiverr Lesson 03

December 13, 2018 0
Fiverr Profile ஐ வடிவமைப்பது எப்படி? | Fiverr Lesson 03

Fiverr Profile ஐ வடிவமைப்பது எப்படி?


Fiverr புதிய பதிப்பு வௌிவந்துவிட்டது, அதனால் உங்கள் Fiverr Profile ஐ வடிவமைப்பது அவ்வளவு கஷ்டமான காரியம் அல்ல. இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயம் பற்றி கூற வேண்டும். ஆரம்பகாலங்கலில் Fiverr கணக்கு ஆரம்பித்தவர்கள் அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் உருவாக்கும் Fiverr Profile போன்று உருவாக்கினர். காரணம் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைவிட அவ்வாறான வளர்ந்த நாடுகளின் கணக்குகளை போன்று உருவாக்கினால் விற்பனைகள் அதிகமாக கிடைக்கும் என்று நம்பினர். உண்மை என்னவென்றால் அவ்வாறு கணக்குகளை உருவாக்குவதால் விற்பனைகள் சற்று அதிகமாகத்தான் இருக்கும், நம் நாட்டு கணக்குகளை விட அவ்வாறான நாட்டு கணக்குகளுக்கு வரவேற்பு அதிகம்தான். எனினும் புதிய பதிப்பில் நீங்கள் அவ்வாறான விடயங்களை செய்ய வேண்டாம். காரணம் நீங்கள் I.P Address ஐ மாற்றி கணக்குகளை உருவாக்கினால் புதிதாக வௌிவந்துள்ள புதிய பதிப்பிற்கு நன்றாக புலப்பட்டுவிடும். அவர்களின் நம்பிக்கையை வீணடித்தால் Fiverr மூலம் கிடைக்கும் பல சலுகைகள் கிடைக்காமலே போய்விடலாம். Fiverr ற்கு உண்மையான மற்றும் நேர்மையான பயனர்களே தேவைப்படுகின்றார்கள். உங்களின் உண்மையான விடயங்களை மாத்திரம் இட்டு கணக்குகளை ஆரம்பியுங்கள். விற்பனை ஆகாது என்று கூறுவதெல்லாம் முட்டாள்தனம், உண்மை என்னவெனில் அவ்வாறு கூறுபவர்கள் வெறும் கணக்கினை மாத்திரம் ஆரம்பித்துவிட்டு Fiverr பக்கமே எட்டிகூட பார்க்கமாட்டார்கள். அப்படியிருந்தால் (சும்மாயிருந்தால்) எப்படி விற்பனைகள் நடக்கும்?? ஆகவே உங்கள் சொந்த விடயங்களை இட்டு கணக்குகளை ஆரம்பியுங்கள்.


சரி, அதிகமாக பேச விரும்பவில்லை. நேராக விடயத்திற்கு வருவோம்.. முதலில் Fiverr தளத்திற்குள் சென்றுவிடுங்கள். அங்கு வலதுபுறத்தில் மேல் மூலையில் Join என்ற பொத்தான் இருக்கும் அதனை அழுத்துங்கள். (உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்)


அதன் பின்னர் ஒரு Popup தோன்றும் (கீழ்காட்டப்பட்டுள்ளவாறு) அதில் உங்கள் ஈமெயில் முகவரியை இட்டு Continue பொத்தானை அழுத்துங்கள். 



நீங்கள் இவ்வாறு செய்யும் கணினியில் ஏற்கனவே உங்கள் ஜீ-மெயில் கணக்கிற்குள் நுழைந்திருந்தாலோ அல்லது பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்திருந்தாலோ.. ஈமெயில் முகவரியை அழுத்தும் இடத்திற்கு மேலாக உள்ள Continue With Facebook  அல்லது Continue with Google என்பதை பாவிக்கலாம். அதன் பின்னர் கீழ்காட்டப்பட்டுள்ளவாறு அடுத்த பக்கம் காட்டப்படும்..


இங்கு இலக்கம் 03 இடப்பட்டுள்ள இடத்தில் உங்கள் பயனர் பெயரையும் (User Name) இலக்கம் 04 குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உங்கள் இரகசிய கடவுச்சொல்லையும் இடுங்கள். முக்கியமானதொரு விடயம் என்னவெனில் User Name ஒரு தடவைதான் இட முடியும். இந்த படிமுறையை தாண்டி சென்றுவிட்டால் இனி எப்பொழுதும் அதனை மாற்றியமைக்க முடியாது.. ஆகையால் நீங்கள் வழங்கவிருக்கும் சேவைக்கு தொடர்புடையதாக உங்கள் User Name இருப்பது நல்லது. உதாரணத்திற்கு உங்கள் சேவை Logo Designing  என்றால் Killer_Design போன்ற பெயர் உங்கள் வளர்ச்சிக்கு உதவும். SEO அடிப்படையிலும் உங்கள் சேவை தேடப்படும் பொழுது உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். ஆகையால் அவ்வாறானதொரு பெயரை இட்டு Join பொத்தானை அழுத்துங்கள். 



இலக்கம் 05 ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு ஒரு செய்தி காண்பிக்கப்படும். அதில் உங்கள் ஈ-மெயில் முகவரியை உறுதி செய்யக்கூறி சொல்லப்பட்டிருக்கும். அதனால் நீங்கள் கணக்கை ஆரம்பிக்க வழங்கிய ஈ-மெயில் முகவரிக்குள் சென்று பார்த்தால் கீழ்காட்டப்பட்டுள்ளவாறு ஒரு ஈ-மெயில் வந்திருக்கும். அதில் இலக்கம் 07 ல் சுட்டிக்காட்டியுள்ள Activate Your Account என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கணக்கை Activate செய்துகொள்ளுங்கள்.  இலக்கம் 06 ல் நான் சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் My Profile என்பதற்குள் சென்றால் உங்கள் Profile ல் நிறைய விடயங்களை உட்செலுத்த கேற்கும். 


இலக்கம் 08 ல் குறிப்படப்பட்டுள்ள இடத்தில் உங்கள் படத்தை பதிவேற்ற வேண்டும். ஆனால் நீங்கள் வழங்கும் சேவைக்கு ஏற்றாற்போல் ஒரு படத்தை பதிவேற்றினாலும் அது உங்களுக்கு பயனளிக்க கூடும்.. ஏனெனில் நாம் User Name ற்கு நாம் வழங்கும் சேவைக்கு சம்பந்தமானதொரு பெயரைதான் வழங்கியிருப்போம்.. ஆகவே அவ்வாற பெயரை User Name ஆக வைத்துக்கொண்டு படத்திற்கு நம் படத்தை பதிவேற்றினால் பொருத்தமாக இருக்காது. அதே நீங்கள் User Name ற்கு உங்கள் பெயரை இட்டிருந்தால் இவ்விடத்தில் உங்கள் படத்தையே பதிவேற்றுங்கள். அதன் பின்னர் இலக்கம் 09 காட்டப்பட்டுள்ள இடத்தில் உங்கள் Story Line எழுத வேண்டும். ஒவ்வொரு வியாபாரத்திற்கும் இவ்வாறு ஒரு Story Line இருக்கும். அது அவ்வியாபாரத்தின் மேல் ஒரு மதிப்பையும் மரியாதையையும் வரவழைக்கும். அவ்வாறே இவ்விடத்தில் Story Line ஒன்றை எழுதுங்கள். 10 குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் கண்டிப்பாக உங்களை Freelancer என்றே தெரிவு செய்யுங்கள், அப்பொழுதுதான் Fiverr உங்களுக்கு அடிக்கடி கற்பித்துகொண்டே இருக்கும். நீங்கள் புதியவர், ஆகையால் அதுவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். இலக்கம் 11 காட்டப்பட்டிருக்கும் இடத்தில் உங்களுக்கு வரும் செய்திகளை பார்வையிடலாம். 12 ஆவது இடத்தில் நீங்கள் Fiverr  பாவிக்கும் பொழுது சேமித்து வைத்தவை எல்லாம் பார்வையிடலாம். 13 காட்டப்பட்டுள்ள இடத்தில்தான் உங்களுக்கு Orders வந்தால் பார்வையிட முடியும்.